Normal view

Received before yesterday

பெண்களும் சமூக அங்கீகாரமும்

6 June 2025 at 16:35

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின்...

The post பெண்களும் சமூக அங்கீகாரமும் first appeared on Her Stories.

Fritz Leiber – Sword and Sorcery

மந்திரவாதிகளும் வாள் வீரர்களும் வாய்மொழிக் கதைகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே நம் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். உலகின் முதல் கதை எனப்படும் கில்கமேஷ் கதையைக் கூட அப்படிப் படிக்கலாம். இருந்தாலும் இன்று Sword and Sorcery ஒரு தனி sub-genre-தான். தோள் வலிமையாலும் வாள் திறமையாலும் மந்திர தந்திரம் அறிந்த எதிரிகளை வெல்லும் வீரர்களின் கதைகள்.

சில டார்ஜான் கதைகள், Conan the Barbarian இதற்கு நல்ல உதாரணங்கள். அவற்றை விட ஒரு மாற்று சிறந்தவையாக நான் மதிப்பிடுவது Fritz Leiber எழுதிய Fafhrd and the Gray Mouser கதைகள். மந்திர தந்திரம் உள்ள கதைகள்தான், ஆனால் ஃபாஃபர்டும் க்ரே மௌசரும் ஓரளவு நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள்.

ஃபாஃபர்ட் ஏழடி உயரம்; மௌசர் ஐந்தடி. இருவரும் தொழில் முறை திருடர்கள். நல்ல வாள் வீரர்கள். அன்றைய உலகத்தின் முக்கிய நகரம் லங்க்மார். அங்கே திருடர்கள் சங்கமே வைத்து நடத்துகிறார்கள். அந்தச் சூழலில் இவர்களுடைய சாகசங்கள்தான் இந்தக் கதைகள். இவற்றை வெறும் அம்புலி மாமா கதைகளாக்காமல் உயர்த்துவது அவர்கள் நம்பக் கூடிய மனிதர்களாக இருப்பதுதான்.

Snow Women (1970) அருமையாக ஆரம்பிக்கிறது. ஃபாஃபர்டின் ஆரம்பம். ஃபாஃபர்ட் 18 வயது இளைஞன். வடக்கின் பனிப் பிரதேசங்களில் வாழும் பழங்குடியினன். அவனுக்கு “நாகரீகமான” தென்பகுதிகளைப் பற்றி அறிய ஆவல். நாடகக் குழு ஒன்று அங்கே பனிப்பிரதேசத்துக்கு வந்திருக்கிறது, வ்லானா முக்கிய நடிகை. ஃபாஃபர்டின் குடிப்பெண்களுக்கு பனியை தங்கள் விருப்பப்படி வளைக்கும் மந்திர சக்தி உண்டு. ஃபாஃபர்ட் பனிப் பிரதேசங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று இந்தப் பெண்கள் தங்கள் சக்தியை பயன்படுத்துகிறார்கள். வ்லானாவும் ஃபாஃபர்டும் எப்படி இணைகிறார்கள், தப்பிக்கிறார்கள் என்று நல்ல சாகசக் கதை.

Unholy Grail (1962) சுமாரான சிறுகதை. க்ரே மௌசரின் முன்கதை. மௌசர் ஒரு மந்திரவாதியிடம் white magic கற்கிறான். அந்த ஊர் ராஜாவின் பெண்ணான இவ்ரியனும் அங்கே பயில்கிறாள், ஆனால் ரகசியமாக. ஏனென்றால் ராஜாவோ தன் அரசாங்கத்தில் மாயமந்திரம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். மௌசர் இல்லாதபோது மௌசரின் குருவை ராஜா கொன்றுவிட, மௌசர் அவனைப் பழிவாங்குவதும் இவ்ரியனோடு நாட்டை விட்டு ஓடுவதும்தான் கதை…

Ill Met in Lankhmar (1970) நெபுலா மற்றும் ஹ்யூகோ விருதுகளைப் பெற்ற குறுநாவல். அவர்கள் முதல் சந்திப்பை விவரிக்கிறது. ஒரே இடத்தில் – திருடர்களிடம் – இருவரும் ஒரே நேரத்தில் திருடப் போகிறார்கள், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். தங்கள் காதலிகளான வ்லானா மற்றும் இவ்ரியனோடூ பார்ட்டி! திருடர்கள் ஒரு பெரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மந்திரவாதி கறுப்புப் புகையை க்ரே மௌசர் வீட்டுக்கு அனுப்புகிறான். மௌசரும் ஃபாஃபர்டும் அப்போது காதலிகளால் தூண்டப்பட்டு அந்த அமைப்பிற்குள் நுழைகிறார்கள். இவர்களுக்கு வைத்த குறி இவர்கள் காதலிகளைக் குரூரமாகக் கொன்றுவிட, இவர்கள் அந்த மந்திரவாதியைக் கொல்கிறார்கள். பிறகு இருவரும் ஜோடியாக பல சாகசங்களைப் புரிகிறார்கள். ஒரே ஒரு கதையைப் படித்துப் பார்க்க விரும்பினால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

Swords against Death (1970), Swords in the Mist (1968) நல்ல தொகுப்புகள். ஃபாஃபர்டும் மௌசரும் பல எதிரிகளை வெல்கிறார்கள். குறிப்பாக When the Sea-King is Away சிறுகதை.

Swords against Wizardry (1968), Swords in Lankhmar (1961), Swords and Ice Magic (1977), The Knight and the Knave of Swords (1988) என்று இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படித்தவரை போதும் என்று தோன்றுகிறது.

லெய்பர் எழுதிய ஒரு சிறுகதை “Gonna Roll the Bones” ஹ்யூகோ விருது மற்றும் நெபுலா விருது பெற்றது. என் கண்ணில் சுமார்தான். A Pail of Air சுவாரசியமான கரு. ஏறக்குறைய உலகமே போரில் அழிய அங்கும் இங்கும் சிலர் தப்புகிறார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது போல ஆக்சிஜனை சேகரிப்பு இடத்திலிருந்து கொண்டு வர வேண்டி இருக்கிறது…

இவை எல்லாம் சாகச நாவல் விரும்பிகளுக்குத்தான். இருந்தாலும் Ill Met in Lankhmar சிறுகதையை மட்டுமாவது படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

விருந்துணவு

20 May 2025 at 17:18

கல்யாண விருந்திற்குச் செல்லத் தயாரானேன். குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் திருமண விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்றைய வரவேற்பில் அத்தையும் மாமாவும் கலந்து கொண்டாயிற்று. நெருங்கிய சொந்தம் என்பதால் காலையில் திருமண விழாவில்...

The post விருந்துணவு first appeared on Her Stories.

‘எங்கே போறீங்க’ முதல் ‘போயிட்டு வர்றேன்’ வரை

20 May 2025 at 06:52

வேலை என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஆனால் அந்த ஒரே வேலைக்கு ஆண் கிளம்புவதும் பெண் கிளம்புவதும் ஒரே மாதிரியான சூழலில் அமைவதில்லை. ‘சமைத்துக் கிளம்புவதற்கும் சாப்பிட்டுக் கிளம்புவதற்கும் இடைப்பட்ட இடைவெளி, வரவேற்பறைக்கும் அடுக்களைக்கும் இடையேயான...

The post ‘எங்கே போறீங்க’ முதல் ‘போயிட்டு வர்றேன்’ வரை first appeared on Her Stories.

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

19 May 2025 at 15:28

ஹலோ தோழமைகளே, நலம், நலமா? கடந்த இரு அத்தியாயங்களாக சுயபிரகடனத்தைப் பற்றி நிறைய பேசினோம். அதன் அவசியம், நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியம் எல்லாம் அலசி ஆயிற்று. இந்த அத்தியாயத்தில் சில சுயபிரகடன உதாரணங்களைப்...

The post பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! first appeared on Her Stories.

வன்முறைகளுக்கு மாறும் கலாச்சாரம் காரணமல்ல!

12 May 2025 at 03:21

வன்முறைகளைத் தடுக்கத் துணிவதில்லை, ஆனால் காணொளிகளாக எடுத்துப் பரப்பும் அளவுக்கு மனம் ஏன் உணர்ச்சியற்றுப் போகிறது? ஒரு சிறுமி கருவுற்றிருக்கிறாள். அது யாரோ அவளை வன்புணர்ந்ததால் நடந்திருக்கிறது. அவளுக்குத் தேவை மருத்துவ உதவியும், பெற்றோரின்...

The post வன்முறைகளுக்கு மாறும் கலாச்சாரம் காரணமல்ல! first appeared on Her Stories.

கனவு மெய்ப்பட வேண்டும்

7 May 2025 at 13:35

ஹலோ தோழமைகளே, நலம். நலமா? சென்ற அத்தியாயத்தில் எண்ணமும் பேச்சும் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பார்த்தோம். மகிழ்ச்சி, உற்சாகம், நன்றி உணர்வு போன்ற நல் உணர்வுகளின் முக்கியதுவத்தைப் பார்த்தோம். அதே நேரம்...

The post கனவு மெய்ப்பட வேண்டும் first appeared on Her Stories.

சிறந்த அனுபவமே வழிகாட்டியாக இருக்க முடியும்!

2 May 2025 at 15:06

ஒரு மேடைப் பேச்சாளர் எப்படி உறவுகளைப் பலப்படுத்துவார்? அதன் மூலம் வன்முறைகளை எப்படித் தடுக்க வழி சொல்வார்? இவற்றைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வன்முறைகளைத் தீர்க்க முனையும் பல...

The post சிறந்த அனுபவமே வழிகாட்டியாக இருக்க முடியும்! first appeared on Her Stories.

வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு

20 April 2025 at 03:23

வன்முறைகளைத் தடுப்பதில் வழிப்போக்கர்களை ஊக்குவிக்கக் கல்வியூட்டுவதற்கு சொற்பொழிவுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது. பட்டிமன்றம் முதல் கதா காலாட்சேபம் வரை பேசாதவர்களே இல்லை. சொற்பொழிவு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. பண்டைய சங்க...

The post வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு first appeared on Her Stories.

தூக்கம் என்ன விலை?

7 April 2025 at 17:41

அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்...

The post தூக்கம் என்ன விலை? first appeared on Her Stories.

❌