Normal view

Received before yesterday

டிக் ஃபிரான்சிஸ்

டிக் ஃபிரான்சிஸ் எனக்குப் பிடித்த த்ரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர். முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கே ஜாக்கியாக இருந்தவர். ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார்.

டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு template உண்டு. எல்லா கதைகளுக்கும் குதிரைப் பந்தய பின்புலம் உண்டு. ஹீரோ ஜாக்கியாக இருக்கலாம், முன்னாள் ஜாக்கியாக இருக்கலாம், அக்கௌன்டன்ட், டிரைவர், குதிரைகளின் பயிற்சியாளர், ஏதாவது ஒரு வகையில் ஹீரோவுக்கு குதிரைப் பந்தய உலகோடு தொடர்பு இருக்கும். எல்லா ஹீரோவும் ஏறக்குறைய ஒரே மாதிரி குணம் உள்ளவர்கள். Strong morals, integrity உள்ள low-key ஆட்கள். என்ன பிரச்சினை வந்தாலும் நிதானம் இழக்கமாட்டார்கள். தன்னை நன்றாக புரிந்து கொண்டவர்கள். அடுத்தவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள். ஏதாவது ஒரு சீனில் வில்லன்களிடம் பயங்கர அடி வாங்குவார்கள். அதுதான் புத்தகத்தின் highlight சீன் ஆக இருக்கும். அடி என்றால் உங்கள் வீட்டு எங்கள் வீட்டு அடி இல்லை. Nerve-இல் ஹீரோவை heating இல்லாத குதிரை லாயத்தில் கைகளை மேலே தூக்கி கட்டிவிட்டு வில்லன் போய்விடுவான். ஹீரோ நாலைந்து மணி நேரம் அப்படி தொங்க வேண்டி இருக்கும். Forfeit-இல் ஹீரோ வெறும் விஸ்கியை இரண்டு முழு டம்ளர் குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டி வரும். கால் உடைந்து படுத்திருக்கும் ஒரு ஹீரோவை தாக்க ஒரு வில்லன் வருவான். எனக்கு அந்த மாதிரி உணர்ச்சிவசப்படாத, எதையும் லாஜிகலாக பார்க்கும் மனிதர்களைப் பிடிக்கும் என்பதால்தானோ என்னவோ இவரது புத்தகங்களை நான் பெரிதும் ரசிக்கிறேன்.

டிக் ஃபிரான்சிசின் இறுதிக் காலத்தில் தன் மகன் ஃபீலிக்ஸ் ப்ரான்சிசுடன் இணைந்து சில புத்தகங்களை எழுதினர். அனேகமாக டிக் ஃபிரான்சிசின் ஐடியாக்களை ஃபீலிக்ஸ் டெவலப் செய்திருக்க வேண்டும். புத்தகங்களின் தரம் குறைவுதான். சமீபத்திய புத்தகமான Gamble இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Forfeit-ஐத்தான். Nerve, Odds Against, Enquiry, Whiphand, Banker, Danger, Break-In, Bolt, Decider, To the Hilt போன்றவையும் நல்ல புத்தகங்கள். எல்லா புத்தகங்களையும் பற்றி ஓரிரு வரி விவரிப்பு கீழே.

மிச்ச பரிந்துரைக்கும் கதைகள்:

Bonecrack, 1971: இன்னும் ஒரு நல்ல த்ரில்லர். குதிரைப் பயிற்சியாளரான அப்பாவுக்கு விபத்து. மகன் நீல் க்ரிஃபான் பொறுப்பேற்கிறார். வில்லன் ஜாக்கியாக அனுபவமே இல்லாத என் 19 வயது மகனுக்கு முதல் தர ரேசில் முதல் தர குதிரையை சவாரி செய்ய ஏற்பாடு செய், இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்கிறார். நீல் எப்படி சமாளிக்கிறார்?

In the Frame, 1976: விறுவிறுவென்று போகும் நாவல். ஓட்டைகளை எல்லாம் கவனிக்க நேரமே கிடையாது. குதிரைகளை வரையும் சார்லஸ் டாட். அவனது கசினின் வீடு கொள்ளையடிக்கப்படுகிறது, கசினின் மனைவி கொல்லப்படுகிறாள். தற்செயலாக ஆஸ்திரேலியாவில் நிறைய பணம் கொடுத்து ஓவியங்களை வாங்கும் இரண்டு ஆங்கிலேயர்களின் வீடுகளில் கொள்ளை நடந்திருப்பதை உணர்கிறான். சுவாரசியமாகச் செல்லும் மர்மக் கதை.

Banker, 1982: மெதுவாகப் போகும் கதை. ஆனால் கதையின் சுவாரசியம் தொய்யாமல் இருக்கும். எகாடரின் ஒரு சிறு வங்கியின் சீனியர் அலுவலர். பெண் குதிரைகளைப் புணர்ந்து குட்டி போடுவதற்காக ஒரு பிரபலமான குதிரையை வாங்க வங்கியில் கடன் தருகிறார். இன்றைய venture capitalists மாதிரி. ஆனால் பிறக்கும் குட்டிகளில் பல உடல் ஊனத்துடன் பிறக்கின்றன. கடன் கொடுத்த எகாடரினின் நிலை அலுவலகத்தில் மிக மோசமாகிறது. குதிரைக்கு என்ன பிரச்சினை?

Danger, 1983: நாயகன் ஒரு பாதுகாவல் கம்பெனியில் வேலை செய்கிறான். அவனுடைய ஸ்பெஷாலிடி கடத்தப்பட்டவர்களை குறைந்த பட்ச மீட்புத்தொகை (ransom) கொடுத்தோ இல்லை எதுவும் கொடுக்காமலோ மீட்பது. கதை அவன் ஒரு அழகிய பெண் ஜாக்கியை மீட்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.

Proof, 1984: விறுவிறுவென்று போகும் கதை. மது வியாபாரி டோனி பீச். தற்செயலாக உயர்ந்த தர வைன், விஸ்கி என்று தாழ்ந்த தர மதுக்களை விற்கும் ஒரு கும்பல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறான். கும்பலின் தலைவன் தனக்கு அபாயமானவர்கள் என்று தோன்றுபவர்களை முகத்தில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசில் கட்டு போட்டு (மூச்சு விடமுடியாது) கொடூரமாகக் கொல்கிறான். பீச் எப்படி தப்பிக்கிறான்?

Break In, 1985: ரோமியோ ஜூலியட் மாதிரி இரண்டு பரம்பரை பகையாளி குடும்பங்களுக்குள் (அல்லார்டெக், ஃபீல்டிங் குடும்பங்கள்) ஒரு காதல். கல்யாணமும் நடந்துவிடுகிறது. இந்த ஜோடி குதிரைகளை பயிற்றுவிக்கிறது. இந்த ஜோடி மீது பல மோசமான வதந்திகள், அவர்கள் திவாலாகும் நிலை. “ஜூலியட்டின்” அண்ணன் கிட் ஃபீல்டிங்தான் நாயகன். ஜாக்கி. பிரச்சினையை சிறப்பாக சமாளிக்கிறான்.

Bolt, 1986: Break In-இன் தொடர்ச்சி. கிட் சவாரி செய்யும் குதிரைகளுக்கு சொந்தக்காரி ஒரு பிரபு குடும்பத்துப் பெரிய மனுஷி. அவர்களது பிசினசை ஆக்கிரமிக்க முயலும் ஒரு வில்லன். மீண்டும் கிட் பிரச்சினையை சிறப்பாக சமாளிக்கிறான்.

Hot Money, 1987: பங்குச் சந்தையில் பெருவெற்றி பெற்றிருக்கும் அப்பா; ஐந்து முறை திருமணம் நடந்திருக்கிறது. அவரை கொல்ல யாரோ முயலும்போது தன் இரண்டாம் மனைவியின் மகனான இயன் பெம்ப்ரோக்கிடம் உதவி கேட்கிறார்.

Decider, 1993: ஸ்ட்ராட்டன் குடும்பத்தில் பல ரகசியங்கள். அவர்களுக்கு ஒரு ரேஸ்கோர்ஸ் சொந்தமாக இருக்கிறது. லீ மாரிஸ் குடும்ப சண்டையில் இழுக்கப்படுகிறான். லீ மாரிஸின் சித்திரம் எனக்குப் பிடித்த ஒன்று.

படிக்கலாம், ஆனால் கொஞ்சம் சுமாரானவை:
Flying Finish, 1966: படிக்கலாம். குதிரைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு கொண்டு செல்லும் ஒரு கம்பெனி.

Smokescreen, 1972: நாயகன் ஒரு நடிகன். அவனைக் கொல்லப் போடப்படும் திட்டத்தை கையும் களவுமாக சினிமாவாகவே படம் பிடித்து விடுகிறான்.

High Stakes, 1975: ஸ்டீவன் ஸ்காட் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் செய்து மில்லியனர் ஆனவன். குதிரைகளை வாங்கி ரேசில் கலந்து கொள்ள வைப்பவன். தன் ட்ரெய்னர் ஜோடி தன்னை ஏமாற்றுகிறான் என்பதை உணர்கிறான். ஜோடியிடமிருந்து தன் குதிரைகளை இன்னொரு ட்ரெய்னரிடம் அனுப்புகிறான். ஜோடி தான் அனுப்ப வேண்டிய உயர் ஜாதி குதிரையைப் போல இருக்கும் வேறு ஒரு சோதா குதிரையை அனுப்பி வைக்கிறான். ஸ்காட் என்ன செய்கிறான் என்பதுதான் கதை. படிக்கலாம்.

Reflex, 1980: சுமார். இறந்து போன ஒரு பத்திரிகையாளனிடம் பலரது குற்றங்கள்-ரகசியங்களுக்கான ஃபோட்டோ ஆதாரங்கள் இருக்கிறது. அவை ஜாக்கி ஃபிலிப் நோரேவிடம் வந்து சேர்கின்றன. பிறகு?

Twice Shy, 1981: ரேசில் எப்போதும் ஜெயிக்க ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் இருக்கிறது. அதைத் தேடும் வில்லனை அண்ணன் ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறான். விடுதலையான பிறகு தம்பிக்கு பிரச்சினை. படிக்கலாம்.

Straight, 1989: டெரக் ஃப்ராங்க்ளினின் அண்ணன் – ரத்தினக் கற்கள் வியாபாரி – இறந்துவிடுகிறார். வழக்கம் போல மர்மங்கள். படிக்கலாம்.

Longshot, 1990: இளம் எழுத்தாளன். பணத்தேவைக்காக ஒரு குதிரைப் பந்தய பயிற்சியாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வருகிறான். குதிரைகளை கவனித்துக் கொள்ளும் ஒரு பெண் ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போயிருக்கிறாள். அவள் பிணம் கிடைக்கிறது. போலீஸ் சந்தேகப்படுபவனைக் கொலை செய்ய ஒரு முயற்சி. சுமாரான நாவல்தான்.

To the Hilt, 1996: நாயகன் ஒரு எக்சென்ட்ரிக் ஓவியன். ஸ்காட்லாந்தின் பெருகுடும்பம் (clan) ஒன்றைச் சேர்ந்தவன். ஏறக்குறைய ஒரு (குடும்பத்துக்கு சொந்தமான) குகையில் வாழ்கிறான். அவனுடைய மாற்றாந்தந்தை பிசினஸ் சிக்கலில். பெருகுடும்பத்தின் தலைவன் பழங்கால வாள் ஒன்றை ஒளித்து வைக்கும்படி சொல்லி இருக்கிறான். குடும்பம் என்பது எவ்வளவு வலிவான பந்தமாக இருக்கலாம் என்பதை நன்றாக காட்டி இருப்பார்.

10 LB. Penalty, 1997: சுமார். தேர்தல் பின்புலம்.

தவிர்க்க வேண்டியவை:

Dead Cert, 1962: முதல் நாவல். கொஞ்சம் அமெச்சூர்தனமாக இருக்கும். தவிர்க்கலாம்.

For Kicks, 1965: ரேஸ்களில் மீண்டும் மீண்டும் எதிர்பாராத விதமாக குதிரைகள் ஜெயிக்கின்றன. லார்ட் அக்டோபர் டேனியல் ரோக்கை துப்பறிய அனுப்புகிறார். ரோக் குதிரைகளுக்கு பாவ்லோவ் முறையில் ஒரு விசில் சத்தத்தையும் நெருப்பையும் வைத்து அவற்றை வேகமாக ஓட்டுகிறார்கள் என்று கண்டுபிடிக்கிறான். ரொம்ப ஸ்லோவான கதை. இன்னும் ஃபிரான்சிஸ் தன் ஃபார்முலாவை முழுதாக கண்டுபிடிக்கவில்லை. தவிர்த்துவிடலாம்.

Risk, 1977: சுமார். அக்கௌன்டன்ட் ரோலண்ட் ப்ரிட்டன் கடத்தப்படுகிறான். ஏன்?

Field of 13, 1998: சிறுகதைகள்.

Blood Sport 1967, Rat Race 1970, Slay Ride 1973, Knockdown 1974, <strongTrial Run 1978, Edge 1988, Comeback 1991, Driving Force 1992: இவை எல்லாமே கொஞ்சம் போரடிக்கும். தவிர்க்கலாம்.

Wild Horses, 1994, Second Wind, 1999, Shattered, 2000: இவை எல்லாம் நிறையவே போரடிக்கும், தவிருங்கள்.

டிக் ஃப்ரான்சிஸ், மற்றும் அவர் மகன் ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிசோடு இணைந்து சில புத்தகங்களை – Dead Heat 2007, Silks: 2008, Even Money 2009, Crossfire, 2010 – எழுதி இருக்கிறார். பொதுவாக ஒரு மாற்று குறைவு. தீவிர டிக் ஃப்ரான்சிஸ் ரசிகர்களுக்கு மட்டும்.

இப்போது ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் தனியாக எழுதிக் கொண்டிருக்கிறார் – Gamble (2011), Bloodline (2012), Refusal (2013), Damaged (2014), Frontrunner (2015), Triple Crown (2016), Pulse (2017), Crisis (2018), Guilty or Not Guilty (2019), Iced (2021), No Reserve (2023), Syndicate (2024) – இரண்டு மாற்று குறைவு! அதிலும் Guilty or Not Guilty புத்தகத்தில் குதிரைப் பந்தயம் பற்றி இருப்பது பெருங்காயம் வைத்த பாண்டமாகத்தான் இருக்கிறது. Syndicate நாவலில் நிறைய நுண்விவரங்கள், ஆனால் முடிச்சு மகாசுலபமாக அவிழ்கிறது. அதிதீவிர டிக் ஃப்ரான்சிஸ் ரசிகர்களுக்கு மட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
டிக் ஃப்ரான்சிசின் சிட் ஹேலி
டிக் ஃபிரான்சிஸ் எழுதிய “ஃபோர்ஃபிட் (Forfeit)”
டிக் ஃபிரான்சிசின் “என்கொயரி”
டிக் ஃபிரான்சிஸ் எழுதிய “நெர்வ்”

ஷெர்லாக் ஹோம்ஸின் போட்டியாளர்கள்

எனக்கு துப்பறியும் கதைகள் மீது கொஞ்சம் பித்து உண்டு. பதின்ம வயதில் படித்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என் உள்ளம் கவர்ந்தவை. அதை விட சிறந்த துப்பறியும் கதைகள் இன்னும் வரவில்லை. பிடித்த கதைகளை சமீபத்தில் ஒரு லிஸ்ட் போட்டிருந்தேன்.

ஹோம்ஸ் கதைகளைப் படித்துவிட்டு வேறு கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆவல். அகதா கிறிஸ்டி, பெர்ரி மேசன் கதைகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. கிறிஸ்டி பிடித்திருந்தாலும் ஹோம்ஸ் அளவு இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. பெர்ரி மேசன் கிறிஸ்டி அளவு கூட வரவில்லை. வேறு துப்பறியும் கதைகளைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

அப்போது ஹ்யூ கிரீன் தொகுத்த Rivals of Sherlock Holmes என்ற புத்தகம் கிடைத்தது. ஹ்யூ கிரீன் (கிரஹாம் கிரீனின் சகோதரர்) இப்படி மூன்று அருமையான தொகுதிகளை கொண்டு வந்திருக்கிறார். Rivals of Sherlock Holmes, Further Rivals of Sherlock Holmes, American Rivals of Sherlock Holmes. அவர்தான் பிற நல்ல கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்த Rivals அனைவரும் ஹோம்ஸின் “சமகாலத்தவர்” – அதாவது ஹோம்ஸ் கதைகள் வந்த காலத்தில் – 19 -ஆம் நூற்றாண்டு இறுதி, இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் – இந்த கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அந்த மூன்று தொகுதிகளிலிருந்து எனக்குப் பிடித்த சில துப்பறியும் “நிபுணர்கள்”, எழுத்தாளர்கள் பற்றி சின்ன ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்:

கிரான்ட் ஆலனின் கர்னல் க்ளே (Grant Allen’s Colonel Clay): க்ளே ஒரு ஏமாற்றுக்காரன். மீண்டும் மீண்டும் தென்னாப்பிரிக்க மில்லியனர் வாண்ட்ரிஃப்டிடமிருந்து பணத்தை திருடிக்கொண்டே இருக்கிறான். Episode of the Diamond Links என்னுடைய ஃபேவரிட் கதை.

ராபர்ட் பாரின் யூஜீன் வால்மான்ட் (Robert Barr’s Eugene Valmont): Absent-minded Coterie ஒரு அருமையான கதை. ஆனால் வேறு எதுவும் அவ்வளவு சுகமில்லை.

ஜாக்விஸ் ஃப்யூட்ரல்லின் திங்கிங் மெஷின் (Jacques Futrelle’s Thinking Machine): ப்ரொஃபசர் வான் டூசன் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி. சவால் விட்டு ஜெயிலிலிருந்து தப்பிக்கும் Problem of Cell 13 மிகவும் அருமையான கதை. எல்லா கதைகளிலும் தரம் எப்போதும் நன்றாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் படிக்கலாம்.

மாரிஸ் லேப்ளான்கின் ஆர்சீன் லூபின் (Maurice Leblanc’s Arsene Lupin): லூபின் ஒரு திருடன். சில கதைகள் – Arsene Lupin in Prison, Red Silk Scarf – நன்றாக இருக்கும்.

ஆர்தர் மாரிசனின் மார்ட்டின் ஹெவிட் (Arthur Morrison’s Martin Hewitt): ஹெவிட் ஒரு சம்பிரதாய துப்பறியும் நிபுணர். படிக்கலாம்.

ஆர்தர் மாரிசனின் டாரிங்க்டன் (Arthur Morrison’s Dorrington): டாரிங்க்டன் துப்பறிபவனாக வேஷம் போடும் திருடன். படிக்கலாம்.

கிளிஃபோர்ட் ஆஷ்டவுனின் ராம்னி ப்ரிங்கிள் (Clifford Ashdown’s Romney Pringle): ராம்னி ப்ரிங்கிள் ஏமாற்றுக்காரர். நான் படித்த கதைகளின் ambience charming ஆக இருந்தது.

பாரனஸ் ஆர்க்சியின் (Baroness Orczy) Old Man in the Corner: ஒரு டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு மர்மங்களை தீர்ப்பார் இந்தக் கிழவர். மிகவும் நன்றாக இருக்கும்.

ஆஸ்டின் ஃபிரீமனின் டாக்டர் தார்ண்டைக் (Austin Freeman’s Dr. Thorndyke): தார்ண்டைக் விஞ்ஞானத்தை பயன்படுத்தி துப்பறிபவர். கொஞ்சம் dry ஆக இருந்தாலும் கதைகள் மிக நன்றாக இருக்கும்.

வில்லியம் ஹோப் ஹாட்க்சனின் கார்னகி (William Hope Hodgson’s Carnacki): கார்னகி பேயோட்டுபவர். எல்லா கதைகளிலும் ஒரு supernatural background இருக்கும்.

எர்னஸ்ட் பிரம்மாவின் மாக்ஸ் காரடோஸ் (Ernest Bramah’s Max Carrados): காரடோஸ் ஒரு குருடர். ஹோம்ஸ் தரத்துக்கு இல்லாவிட்டாலும் நல்ல துப்பறியும் கதைகள்.

சில இன்று curiosities மட்டுமே. Guy Boothby உருவாக்கிய திருடன் Simon Carne (A Wedding Guest சிறுகதை, Prince of Swindlers தொகுப்பு), E. Phillips Oppenheim (Mr. Blunt’s Three Clients சிறுகதை போன்றவை.

இந்தத் தொகுப்பில் இடம் பெறாத சில நல்ல துப்பறியும் கதைகளை எழுதியவர்கள்:

  1. எட்கார் ஆலன் போ – டூபின் (Edgar Allan Poe – Auguste Dupin) குறிப்பாக Purloined Letter சிறுகதை. டூபின் இல்லாத Gold Bug சிறுகதை.
  2. அகதா கிறிஸ்டி – ஹெர்க்யூல் போய்ரோ, மிஸ் மார்பிள் கதைகள் (Agatha Christie: Hercule Poirot, Miss Marple)
  3. டோரதி சேயர்ஸ் – பீட்டர் விம்சி கதைகள் (Dorothy Sayers: Lord Peter Wimsey)
  4. ஜி.கே. செஸ்டர்டன் – ஃபாதர் பிரவுன் கதைகள் (G.K. Chesterton: Father Brown)
  5. ஈ.சி. பென்ட்லி – ட்ரென்ட் கதைகள் (E.C. Bentley: Trent)
  6. ஹெச்.சி. பெய்லி – டாக்டர் ஃபார்ச்சூன் கதைகள் (H.C. Bailey – Dr. Fortune)
  7. எட்கார் வாலஸ் – ஜே.ஜி. ரீடர் கதைகள் (Edgar Wallace – J.G. Reeder)
  8. ஜோசஃபின் டே (Josephine Tey) – குறிப்பாக Daughter of Time நாவல்.
  9. மெல்வில் டேவிசன் போஸ்ட் – அங்கிள் எப்னர், ராண்டால்ஃப் மேசன் கதைகள் (Melville Davisson Post – Uncle Abner, Randolph Mason)
  10. டாஷியல் ஹாம்மட் (Dashiel Hammett)
  11. ரேமன்ட் சாண்ட்லர் – ஃபிலிப் மார்லோ (Raymond Chandler – Phillip Marlowe)
  12. ஜான் டிக்சன் கார் (John Dickson Carr) – குறிப்பாக Three Coffins நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

போப்பாக ஒரு திருநங்கை – ராபர்ட் ஹாரிசின் ‘Conclave’

ஒரு வழியாக Conclave திரைப்படத்தை பார்த்தேன். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (ரால்ஃப் ஃபியன்னஸ்) உட்பட பல ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது, புத்தகத்திலிருந்து திரைக்கதை எழுதப்பட்ட பிரிவில் வெல்லவும் செய்தது. புத்தகத்தைப் படித்தபோது சுமார் என்றுதான் மதிப்பிட்டிருந்தேன். சில சமயம் சுமாரான புத்தகம் சிறப்பான திரைப்படமாக மாறுவதுண்டு, அப்படிப்பட்ட ஒன்றோ என்று நினைத்திருந்தேன்.

ஃபியன்னஸின் நடிப்பு – ஏன் ஸ்டான்லி டுச்சியின் நடிப்பும் கூட அருமைதான். ஆனால் திரைப்படம் இரண்டு ஆண்டுகளில் மறக்கப்பட்டுவிடும். அடிப்படைக் கதை சுவாரசியமான அரசியல் த்ரில்லராக எடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் என் கண்ணில் விமானப் பயணங்களில் பார்த்துவிட்டு மறந்துவிடும் திரைப்படம்தான். இன்று திருநங்கை உரிமைகள் என்பது ஒரு trending topic, அந்த குறுகிய கால பிரபலத்தால் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று தோன்றுகிறது.

முன்பு எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன்…

சாதாரணமாக spoiler இல்லாமல் புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றுதான் முயற்சிப்பேன். இந்த முறை புத்தகம் கிளப்பிய எண்ணங்களைப் பற்றி எழுத விரும்புகிறேன், அது spoiler இல்லாமல் முடியாது.

ஹாரிஸ் எழுதிய சிசரோ trilogy-க்கு நான் பெரிய ரசிகன். புதிய புத்தகம் – Conclave (2016) – ஒன்று கண்ணில் பட்டதும் படிக்க ஆரம்பித்தேன். சாதாரண வணிக நாவல்தான். விறுவிறுவென்று போவதும், சில நுண்விவரங்களும்தான் புத்தகத்தின் பலம்.

போப் இறந்த பிறகு அடுத்த போப்பை உயர்நிலையில் இருக்கும் சர்ச் குருமார்கள் (cardinals) தேர்ந்தெடுப்பார்கள். தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரியான லோமலியின் கண்ணோட்டத்தில் மூன்று நாள் நடக்கும் அந்த தேர்தல் விவரிக்கப்படுகிறது. முன்னணியில் இருப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு வெளிவருகின்றன. கடைசியில் புதிதாக மற்றும் ரகசியமாக நியமிக்கப்பட்ட ஒரு cardinal – பெனிடஸ் – போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடைசி பக்கங்களில் லோமலிக்கு பெனிடஸ் ஒரு திருநங்கை என்று தெரிகிறது. ஆனாலும் பெனிடஸ் போப்பாகிறார்.

மாதொருபாகன் சர்ச்சை (மற்றும் பல சர்ச்சைகள்) பெரிதாக இருந்தபோது பெருமாள் முருகன் ஹிந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார் என்று பலரும் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அடிக்கடி பார்த்த ஒரு கேள்வி – இப்படி பிற மதங்களைப் பற்றி எழுதிவிட முடியுமா? இதோ ஒருவர் எழுதி இருக்கிறார், அது பெஸ்ட்செல்லரும் கூட. யாராவது ஏதாவது கேட்கிறார்களா என்ன? டாவின்சி கோட் இந்தியாவில்தான் தடை செய்யப்பட்டது, கிறிஸ்துவம் dominate செய்யும் மேலை நாடுகளில் அல்ல. ஹாரிஸ் இங்கிலாந்துக்காரர், இங்கிலாந்தின் அரசர்/அரசி இங்கிலாந்து சர்ச்சின் ஏறக்குறைய தலைவர் பதவியில் இருப்பவர். அப்படியும் ஒரு பிரச்சினையும் கிடையாது. என் மகாபாரதச் சிறுகதைகளில் கிருபருக்கு துரோணர் மேல் பொறாமை, பீஷ்மருக்கு அம்பை மேல் காதல் என்றெல்லாம் கற்பனைக் கதைகளாக எழுதித் தள்ளுகிறேன், அதை ஹிந்துத்துவ தளமான தமிழ் ஹிந்து தளத்தில் பிரசுரிக்கவும் செய்கிறார்கள். அது ஏன் திடீரென்று ஒரு புனைவை புனைவாக மட்டும் கருதாமல் அதை தங்கள் மத நம்பிக்கைகளோடு இணைத்துக் கொள்கிறீர்கள்? அதுவும் பன்மைத் தன்மையையும் சகிப்புத்தன்மையையும் தன் அடையாளமாகக் கொண்டுள்ள ஹிந்துக்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? இதற்கு பதிலாக டாவின்சி கோடும் Satanic Verse-உம் தடை செய்யப்படக் கூடாது என்று குரல் எழுப்பலாமே?

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள், Films

பின்குறிப்பு: ஹாரிசின் எல்லா நாவல்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. உதாரணமாக Fear Index (2010) எல்லாம் பஸ்ஸில் படிக்கக் கூட லாயக்கில்லை. ஆனால் சிசரோ புத்தகங்களோ மிகச் சிறப்பானவை. இது சுமாரான வணிக நாவலாக இருக்கிறது…

மைக்கேல் கானலி: மிக்கி ஹாலர் நாவல்கள்

Michael Connelly

கானலி சிறந்த த்ரில்லர் எழுத்தாளர்.

கானலி எழுதுவது வணிகக் கதைகள்தான். ஆனால் நல்ல வணிகக் கதைகளுக்குரிய விறுவிறுப்பு, சுவாரசியம் இவையோடு நின்றுவிடுவதில்லை. அவரது கதைகளில் மீண்டும் மீண்டும் வரும் காவல் துறை அதிகாரி ஹாரி போஷின் பாத்திரம் நாயகத் தன்மை உடையது. கொலைகாரர்களை – தீய சக்திகளை – தீய சக்தி என்றால் பத்தவில்லை, evil-ஐ அழிப்பதுதான் போஷின் ஸ்வதர்மம். துப்பறிபவர்களுக்கு நம்பகத் தன்மையுடன் ஸ்வதர்மத்தை உருவாக்குவது கஷ்டம். அதனால்தான் முக்கால்வாசி துப்பறியும் கதை எழுதுபவர்கள் இதையெல்லாம் பற்றி கவலைப்படுவதில்லை. ஷெர்லக் ஹோம்ஸ் கூட இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அதே விழுமியங்களோடு துப்பறிந்தால் கொஞ்சம் செயற்கையாக இருக்கும். ஆனால் அப்படி உருவாக்கிவிட்டால் துப்பறியும் நிபுணர் நாயகனாக மாறிவிடுகிறார். வெகு சிலரே – ஹோம்ஸ், டாஷியல் ஹாம்மெட்டின் சாம் ஸ்பேட், ரேமண்ட் சாண்ட்லரின் ஃபிலிப் மார்லோ, டிக் ஃப்ரான்சிஸின் நாயகர்கள், இந்த ஹாரி போஷ், சாரா பாரட்ஸ்கியின் வி.ஐ. வார்ஷாவ்ஸ்கி – அப்படிப்பட்ட நாயகர்கள்.

ஆனால் இந்தப் பதிவு ஹாரி போஷ் பற்றி அல்ல. ஹாரி போஷின் மாற்றாந்தாய் மகன் மிக்கி ஹாலர் பற்றி. மிக்கி ஹாலர் நாவல்கள் வணிக நாவல்கள்தான், அதில் பெரிதாக கதாபாத்திரங்களை வடித்தல் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனால் மிக்கி ஹாலர்தான் கானலியின் மிகப் பிரபலமான பாத்திரம் என்று நினைக்கிறேன். காரணம் Lincoln Lawyer மாத்யூ மக்கானகி நடித்து திரைப்படமாக வந்து பெருவெற்றி பெற்றதுதான். திரைப்படங்களின் வீச்சு எப்போதும் புத்தகங்களை விட மிக அதிகம்.

மிக்கியும் ஹாரி போஷும் அரை-சகோதரர்கள் (ஒரே அப்பா, வேறு வேறு அம்மாக்கள்) என்பது சுவாரசியமான பின்கதை. இருவருக்கும் நடுவே நல்ல உறவு, நட்பு உண்டு. மிக்கிக்கு இரு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருக்கிறது. இரண்டு முன்னாள் மனைவிகளுடனும் நல்ல நட்பு, உறவு உண்டு. ஒரு முன்னாள் மனைவி அவனிடமே வேலை பார்க்கிறாள்.

மிக்கி ஹாலர் நாவல்களின் கவர்ச்சி வழக்குகள், நீதிமன்றங்கள், சிறைகள் பற்றிய நுண்விவரங்களை சுவாரசியமாக கதையில் பிணைப்பது. ஒவ்வொரு நாவலிலும் ஒன்றிரண்டு சிறப்பான வழக்கு விசாரணை தருணங்கள் இருக்கும். அரசு தரப்பும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பும் ஆடும் விளையாட்டுக்கள்.

மிக்கியின் வாழ்க்கையில் சிரமமான தருணங்கள் உண்டு. வழக்கே கிடைக்காமல் அல்லாடுவது உண்டு. தேங்காய்மூடி கச்சேரி செய்வதெல்லாம் உண்டு. கட்சிக்காரன் குற்றவாளி என்று தெரிந்தாலும் விடாமல் போராடுவான். ஆனால் நிரபராதி என்று தெரிந்துவிட்டால் உடும்புப்பிடிதான்.

அனேகமாக எல்லா நாவல்களையும் படிக்கலாம். நான் பரிந்துரைப்பவை Lincoln Lawyer மற்றும் Law of Innocence

Lincoln Lawyer (2005): நல்ல முடிச்சுள்ள த்ரில்லர். ஒரு வழக்கில் மிக்கி ஹாலர்தான் வக்கீலாக வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவன் கேட்கிறான். ஏன் என்பதுதான் முடிச்சு. 2011இல் திரைப்படமாகவும் வந்தது.

Brass Verdict (2008) இன்னொரு விறுவிறுப்பான நாவல். இந்த முறை ஒரு வக்கீல் கொல்லப்பட, அந்த வக்கீலின் கேஸ்களை எடுத்து நடத்தும் வாய்ப்பு மிக்கி ஹாலருக்குக்கு கிடைக்கிறது. அதில் ஒன்று பெரிய, நிறைய ஃபீஸ் வரக்கூடிய வழக்கு ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர் தன் மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் கொலை செய்துவிட்டான் என்ற வழக்கு. ஒரிஜினல் வக்கீல் இறந்து போனாலும் எந்தத் தாமதமும் இல்லாமல் கேஸை நடத்த வேண்டும் என்கிறான் அந்தத் தயாரிப்பாளன். புது வக்கீலுக்கு கேஸை புரிந்து கொள்ள கொஞ்சமாவது கால அவகாசம் தருவது பழக்கம். ஆனால் தாமதிப்போம் என்று சொன்னால் கேஸும் ஃபீஸும் கையை விட்டுப் போய்விடும் என்று புரிந்து கொள்ளூம் மிக்கி சரி நடத்துவோம் என்கிறான். இறந்துபோன வக்கீலின் கொலைக்கேஸை துப்பறிவது இன்னொரு பிரபல துப்பறிவாளனான ஹாரி போஷ். ஒரிஜினல் வக்கீல் கொல்லப்பட்டது ஏன், ஏன் கால அவகாசம் இல்லை என்பதுதான் முடிச்சு. ஹாரியும் மிக்கியும் ஒரே அப்பாவுக்குப் பிறந்தவர்கள் என்பது இந்த நாவலில் தெரிய வருகிறது.

Reversal (2010) நாவலின் சுவாரசியம் மிக்கி இந்த முறை அரசு தரப்பு வக்கீலாக வாதிடுவது. பல ஆண்டுகளுக்கு முன் சிறுமியைக் கற்பழித்து கொலை செய்ததாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஜெஸ்ஸப். அன்று இல்லாத, இன்று செய்யப்படும் DNA பரிசோதனை அந்த வழக்கில் கிடைத்த விந்து ஜெஸ்ஸப்புடையது அல்ல என்று காட்டுகிறது. மிக்கி அரசு தரப்பு வக்கீலாக நியமிக்கப்படுகிறான். மிக்கிக்கு துணையாக ஹாரி போஷ். அவர்கள் ஜெஸ்ஸப் குற்றவாளி என்று உறுதியாக நம்புகிறார்கள். என்ன நடக்கிறது, முடிச்சுகள் எப்படி அவிழ்கின்றன என்பது சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது.

Fifth Witness (2011): கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் குள்ளமான ஒரு பெண் உயரமான அந்த மனிதரை கொன்றிருக்க முடியாது என்று வாதாடி அந்தப் பெண்ணை விடுவிக்கும் ஹாலருக்கு அவள்தான் கொலையாளி என்று தெரிய வருகிறது. என்ன செய்ய?

Gods of Guilt: (2013) விறுவிறுவென்று போகும் இன்னொரு நாவல். ஒரு வேசியை அவளுடைய தரகனே கொன்றுவிட்டதாக ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கு. வழக்கின் முடிச்சுகள் மெதுமெதுவாக அவிழ்வது நன்றாக வந்திருக்கும். அதிலும் கடைசி விசாரண பிரமாதம்.

Law of Innocence: (2020) விறுவிறுவென்று போகும் இன்னொரு நாவல். மிக்கி ஹாலர் மீதே கொலைக்குற்றம் சாட்டப்படுகிறது! விரிவாக இங்கே

Resurrection Walk (2023) படிக்கக் கூடிய நாவல். இன்று யோசித்துப் பார்த்தால் மிக்கியின் வாதங்கள் சட்ட நுணுக்கங்களால் நிராகரிக்கப்படுவதுதான் நினைவில் நிற்கிறது. விரிவாக இங்கே.

சுருக்கமாகச் சொன்னால் த்ரில்லர் விரும்பிகள் தவறவிடக் கூடாது.

❌