You Killed Me First by John Marrs:
John ஆங்கிலேய எழுத்தாளர். முன்னாள் பத்திரிகையாளர். தொலைக்காட்சிக்காக, பத்திரிகைகளுக்காக எண்ணற்ற Celebrityகளை பேட்டி கண்ட இவர் இப்போது முழுநேர எழுத்தாளர்.
திரில்லர் Genreல் Freidaவிற்கு அடுத்து உலகெங்கும் Quote செய்யும் பெயர் இவருடையது. Ruthware, Lisa Jewell, Paula Hakins, Alice Feeney, Alex Michaelides,
S J Watson ஆகியோர் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஆங்கிலேயத் திரில்லர் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள்.
மூன்று பெண்கள், மூவரிடமும் வெளியில் தெரிந்தால் சிறையில் வெகுகாலம் இருக்க வேண்டிய இரகசியங்கள். நாவலின் ஆரம்பத்தில் ஒருபெண்ணுக்கு Big Bonfire நெருப்புக்கு இடையில் நினைவு திரும்புகிறது. என்ன காரணத்திற்காக, யார் அவளை நெருப்புக்குள் சிக்க வைத்திருப்பார்கள் என்பதும் புரிகிறது. ஆனால் மூவருமே உயிர்கொல்லும் இரகசியத்தை மறைத்து வைத்திருப்பதால் மூவரில் யார் மாட்டிக் கொண்டது?
மூவருமே கதைசொல்லிகள், எனவே மூன்று Perspectivesல் கதை நகர்கிறது.
இடையே வேறு சிலர் அவர்கள் கோணத்தில் கதையை நகர்த்துகிறார்கள். கடைசியில் அவர்கள் யார் என்பது தெரிய வரும்.
Margotவை அதிக வாசகர்கள் விரும்புவதற்கான வாய்ப்பதிகம். அவளுடைய மனவோட்டம் நம்மை எப்போதும் புன்னகைக்க வைக்கும்.
மூன்று கதாபாத்திரங்களுக்கேற்ப மொழிநடையிலும் சிறிய மாறுதலைக் கொண்டு வந்திருக்கிறார் John. ஆரம்பத்தில் இருந்து Epilogue வரை பல டிவிஸ்டுகள் நிறைந்த நூலிது. திரில்லர் நாவலை நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு வாசித்தாலும் எல்லாமே நினைவிலிருக்கும். ஆனால் இந்த நாவலுக்கு அப்படி சொல்வதற்கில்லை. மார்ச் 2025ல் வெளியாகியது இந்த நாவல்.