விண்மீன்கள் மோதும் போது… : ஒடெசா மோஷ்ஃபெக்
11 May 2025 at 18:30
May 12, 2025
மதுக்கூடத்திற்குத் திரும்பும் வழியில் என்னை சந்தித்த அவள், இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் சொன்ன விதம், நான் அவளை முன்பே கவனிக்காவிட்டாலும், இரவு முழுவதும் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தது போலவும், அதை சொல்வதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போலவும் இருந்தது.