விருட்சத்திற்கான வித்து|சா.சிவானந்தம்
9 April 2025 at 04:13
முயற்சியை விதைத்தேன்
வளர்ச்சி விருட்சமானது !
தடைகளைத் தகர்த்து விதைத்தேன்
பாதை விருட்சமானது !
செயல்களை விதைத்தேன்
வெற்றி விருட்சமானது !
அவிநயம் விதைத்தேன்
ஆடல் விருட்சமானது !
யாப்பினை விதைத்தேன்
பாப்புனைதல் விருட்சமானது !
பூவினை விதைத்தேன்
தேன் விருட்சமானது !
நட்பினை விதைத்தேன்
அன்பு விருட்சமானது !
அன்பினை ஆழமாக விதைத்தேன்
அளாவிய காதல் விருட்சமானது !
அறிவினை விதைத்தேன்
கல்வி விருட்சமானது !
தமிழை விதைத்தேன்
கவிதை விருட்சமானது !
ஒளியை விதைத்தேன்
வெளிச்சம் விருட்சமானது !
நல்லொழுக்கங்கள் விதைத்தேன்
நல்ல மானுடர்கள் விருட்சமானார்கள்..!
கவிதையின் ஆசிரியர்
சா.சிவானந்தம் எம்.ஏ, பி.எட், எம்.ஏ, சி.எல்.ஐ.எஸ்
முதுகலைத் தமிழாசிரியர்
தி யுனைடெட் பப்ளிக் பள்ளி
கோவை
The post விருட்சத்திற்கான வித்து|சா.சிவானந்தம் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.