Normal view

Received before yesterdayகாம்கேர் கே. புவனேஸ்வரி

நடிகர் ராஜேஷ்!

நடிகர் ராஜேஷ்! நடிகராக நான் முதன் முதலில் இவர் நடித்துப் பார்த்த திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. அப்போது ராஜேஷ் என்ற நடிகர் குறித்த எந்த அபிர்ப்பிராயமும் கிடையாது. அதன் பிறகு சில வருடங்களாக குறிப்பாக கொரோனா காலத்தில் இருந்து அவர் நேர்காணல்கள் செய்து வந்த வீடியோக்கள் (இவர் பிறரை செய்த நேர்காணல்கள்) நிறைய கண்களில்...

#USA: ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்!

ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்! #usatrip2025_ckb-9 டெட் ட்ரூஸ்! அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் ஐஸ்க்ரீமின் சுவை நம்மை கட்டிப் போடுகிறது என்றால், அங்கு பணி புரியும் இளைஞர்களின் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. ஆம். ஒரு வீட்டில் இருந்து பத்து பேர் வந்து பத்துவிதமான ஐஸ்க்ரீம் மற்றும் டாப்பிங் சொன்னாலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள்...

#Ai: விருது வாங்கும் வயதான சிறுவன்!

விருது வாங்கும் வயதான சிறுவன்! சென்ற பதிவில் என் புகைப்படம் எதையுமே நான் கொடுக்காமல் என்னை வரைந்து கொடுக்க சொன்னதற்கு ஏஐ புரிந்து கொண்டு மிக சரியாக (சென்ற பதிவை பார்க்கவும். Link in comment) வரைந்து தந்தது அல்லவா? இன்று ஒரு சிறுவன் ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக வரையச் சொன்னேன். ஏஐயும் சிரமேற்கொண்டு...

#Readers Ride: விவேகானந்தர் நூலும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாளும்!

நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வாசித்த அன்பரது நூல் அனுபவம்! ‘இப்படிக்கு அன்புடன் மனசு!’ – விவேகானந்தரின் வாழ்க்கை சம்பவங்களுடன் என் வாழ்வில் எதேச்சையாக நடந்த சில நிகழ்வுகளை குறிப்பிட்டு எழுதிய நூல். இதனை உளவியல் நூலாகவே உணர்ந்து குறிபிட்ட அன்பருக்கு நன்றி! நேற்று இமெயிலிலும், வாட்ஸ் அப்பிலும் வந்திருந்த கடிதத்தை அனுமதியுடன் பகிர்கிறேன். —- வணக்கம்...

#Ai: மே(லா)ஜிக் செய்யும் ஏஐ!

மே(லா)ஜிக் செய்யும் ஏஐ! ‘காம்கேர் புவனேஸ்வரி எழுதிக் கொண்டிருப்பதைப் போல் படம் வரைந்து தா’ என ஏஐயிடம் கேட்டதற்கு, ஏஐ  வரைந்து கொடுத்த படத்தைப் பாருங்கள் (இடப்பக்கம்). என் புகைப்படம் எதையும் மாடலுக்காக ஏஐக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அது எப்படி என் உருவத்தை வரைந்து கொடுக்க முடியும், அதற்கு எப்படி என்  உருவம் தெரியும் என...

#USA: இராணுவப் பயிற்சி! (மே 18, 2025)

இராணுவப் பயிற்சி! #usatrip2025_ckb-8 பாஸ்டனில், தங்கள் மகளுடைய பட்டமளிப்பு விழாவிற்காக சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன். அவருடைய மகன் +2 முடித்திருந்தார். பால் வடியும் முகத்துடன் சமர்த்தாக அப்பா அம்மாவுடன் நின்று கொண்டிருந்தவனிடம் நானாகத்தான் பேச்சு கொடுத்தேன். தமிழ் அழகாக பேசினான். தேவையான இடத்தில் மட்டும் ஆங்கிலம். அவன் முகம் ஏதோ ஒரு...

#USA: பல்கலைக்கழக பாஸ்டன்! (மே 10, 2025)

பல்கலைக்கழக பாஸ்டன்! #usatrip2025_ckb-7 அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்துக்கு வேறு பெயர் கொடுக்கலாம் என்றால் பல்கலைக்கழக நகரம் அல்லது கல்லூரி நகரம் என்று கொடுக்கலாம். ஏனெனில், நகரமே புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் நிரம்பி வழிந்தது. பாஸ்டன் பல்கலைக்கழகம், பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக், ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், எம்.ஐ.டி, நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் என பிரமாண்டமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்...

ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த பெண் சிங்கங்கள்!

ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த பெண் சிங்கங்கள்! கர்னல் ஷோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோம்கா சிங் – ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்து சென்ற இரண்டு பெண் சிங்கங்கள்… இராணுவ அதிகாரிகள். ராணுவத்தில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இவர்கள் பெண்கள் என்பதற்காக அந்தப் பொறுப்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாக அந்தப்...

#USA: அப்பிடைசர் வார்த்தைகள்! (மே 4, 2025)

அப்பிடைசர் வார்த்தைகள்! #usatrip2025_ckb-6 சென்னையில் வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவர் தம்பதி சமேதராக அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் மகள்களை பார்க்க வந்திருந்ததால் அவர்களை எங்கள் இருப்பிடத்துக்கு அழைத்து சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். எங்கள் உறவினரை அடிக்கடி குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவருடைய மகள்களை பார்க்கும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. அவர்கள் சிறு குழந்தைகளாக...

#USA: ஹவாய் தீவில் சிவபெருமான் தரிசனம் (ஏப்ரல் 23, 2025)

ஹவாய் தீவில் சிவபெருமான் தரிசனம் #usatrip2025_ckb-5 ஹவாய் தீவில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு பக்தர்கள் முன் அனுமதி பெற்று அவர்கள் குறிப்பிடும் நேரத்துக்கு மட்டுமே பூஜையில் கலந்துகொள்ள முடியும். நாங்கள் ஏப்ரல் 23, 2025 அன்று காலை 9 மணிக்கு முன் அனுமதி பெற்று சென்று வந்தோம். அன்றைய தினம் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. பசுமையான மரம்...

#USA: சிவபெருமானின் உத்தரவு கிடைக்கப் பெற்ற தெய்வீகத் தருணம்! (ஏப்ரல் 23, 2025)

சிவபெருமானின் உத்தரவு கிடைக்கப் பெற்ற தெய்வீகத் தருணம்! #usatrip2025_ckb-4 அமெரிக்காவில் ஹவாய் தீவில் உள்ள சிவபெருமான் ஆலயம் சென்றிருந்தோம் (ஏப்ரல் 23, 2025). இந்தக் கோயிலில் பூஜை நடந்து கொண்டிருந்தபோது சிவபெருமான் மறைமுகமாக எனக்கு ஓர் உத்தரவை அருளினார். சிவபெருமானின் கருணை கிடைக்கப் பெற்ற அற்புதத் தருணம் அது. இந்தப் பதிவின் கடைசியில் அதை குறிப்பிட்டுள்ளேன்....

#USA: மலைகளுக்கு எதற்குப் போர்வை? (ஏப்ரல் 18, 3025)

  மலைகளுக்கு எதற்கு போர்வை! #usatrip2025_ckb-3 வாக்கிங் செல்லும்போது பாடல்கள் கேட்டுக் கொண்டு நடப்பது வழக்கம். சில சமயங்களில் நானே தேர்வு செய்து கேட்பதுண்டு. பல சமயங்களில் ஏஐ தொழில்நுட்பம் நமக்கு என்ன பிடிக்கும் என தெரிந்துகொண்டு அவற்றை தானே தேர்ந்தெடுத்து கொடுப்பதும் உண்டு. அந்த வகையில் நேற்று வாக்கிங் செல்லும்போது இந்தப் பாடல் வரிகளை...

#USA: கல்வி எனும் மகத்தான செல்வம்! (ஏப்ரல் 11, 2025)

கல்வி எனும் மகத்தான செல்வம்! #USAtrip2025_CK-2 நம் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டுகளில், மளிகை கடைகளில்,  துணிக்கடைகளில், ஸ்டார் ஓட்டல்கள் அல்லாத சாதாரண ஓட்டல்களில் வேலை செய்வோர்கள் பெரும்பாலும் படிக்காத அல்லது  படிக்க வசதி இல்லாத அல்லது பள்ளிப்படிப்பைத் தாண்டாத இளைஞர்களாகவே (ஆண், பெண்) இருப்பார்கள். வயதில் முதிர்ந்த பெரியோர்களை அவ்வளவாக அந்த வேலைகளில் பார்ப்பது அரிது....

Reading Ride: அந்தக் காலத்திலேயே…

‘அந்தக் காலத்திலேயே’ என ஆரம்பித்து என் உழைப்பையும் எங்கள் காம்கேரின் புதுமையான அணுகுமுறைகளையும் நினைவு கூர்ந்த திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி! இந்த ஆடியோ நான் இன்னும் உயிர்ப்புடன் செயல்பட ஊக்கமளிக்கிறது. காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர் Compcare K Bhuvaneswari காம்கேர் சாஃப்ட்வேர் Compcare Software ஏப்ரல் 13, 2025 | ஞாயிறு

Reading Ride: எழுத்துக்கு மரியாதை

திரு. த.சீனிவாசன் அவர்கள் நடத்தி வரும் கணியம் அறக்கட்டளை வெப்சைட்டில் காம்கேர் கே. புவனேஸ்வரி குறித்தும் எழுதி உள்ளார். https://kaniyam.com/learn-python-in-tamil-1/

#Ai : நம் தகவல்கள் பரிசோதனைக்கு!

நம் தகவல்கள் பரிசோதனைக்கு! Ai காம்கேர் கே. புவனேஸ்வரி! எனக்கு இந்த கெட் அப் மிகவும் பிடித்துள்ளது. பொருத்தமாகவும் இருப்பதாக தோன்றுகிறது. நம் மக்களுக்கு Ai குறித்த விழிப்புணர்வு 2023 க்கு பிறகுதான் ஆரம்பித்துள்ளது. இதே துறையில் 33 வருடங்களாக இயங்கி வரும் நான் எங்கள் காம்கேரில் 1992 ல் இருந்தே Ai குறித்த பல...

#USA: அமெரிக்காவில் வேள்பாரி! (ஏப்ரல் 6, 2025)

#usatrip2025_ckb-1 அமெரிக்காவில் வேள்பாரி! காசி அயோத்தியா பயணம் முடித்துக் கொண்டு சென்னை வந்து இரண்டு தினங்கள் கழித்து முக்கியமான சில நிகழ்வுகளுக்காக அமெரிக்கா பயணம். ஏற்கெனவே திட்டமிட்டதுதான். இடைப்பட்ட அந்த இரண்டு தினங்களில் அலுவலகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டுகள் குறித்த மீட்டிங், இம்ப்ளிமெண்டேஷன் என முடித்துக் கொண்டு பொறியாளர்களுக்கு முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட்டுகள் குறித்து...

#KASi : காசியும் அயோத்தியும்! (மார்ச் 30, 2025 – ஏப்ரல் 3, 2025)

 காசியும் அயோத்தியும்! புகைப்படங்களுடன் படிக்க இங்கே  கிளிக் செய்யவும்!  நாள் – 1: பிரயாகையில் திருவேணி சங்கமத்தில் நீராடல் நாள் – 2: ருத்ர பூஜையும் கங்கா ஆரத்தியும் நாள் – 3: அயோத்தி ஸ்ரீராமர் தரிசனம் நாள் – 4: காசி விஸ்வநாதர் ஆலயம், தொந்திப் பிள்ளையார், காசி விசாலாட்சி, வராகி,  அன்னப்பூரணி, கால பைரவர் தரிசனம் நாள் – 5: பத்திரமாக கூடடைதல், காசிக்கு ‘பை...
❌