பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள்
ஸ்ரீனிவாச கோபாலன் அழிசி பதிப்பகத்தை நடத்துகிறார். இத்தனை இளைஞர் என்று இப்போதுதான் – அவரது புகைப்படத்தைத் தேடும்போதுதான் – தெரிந்தது.
இன்று புழக்கத்தில் இல்லாத பழைய புத்தகங்கள் பலவற்றையும் வெளியிட்டிருக்கிறார் – படித்திருக்கிறீர்களா? உட்பட. அதற்கு ஒரு இரண்டாம் பாகம் இருக்கிறது என்று அவர் மூலம்தான் கேள்விப்பட்டேன். அடுத்த முறை இந்தியா போகும்போது அவரை சந்தித்து புத்தகத்தை வாங்க் வேண்டும். க.நா.சு. வின் பல புத்தகங்களை பதித்திருக்கிறார்.
பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள் என்று அவர் தொகுத்த ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. க.நா.சு. பெண்ணெழுத்து என்றெல்லாம் பார்க்க வாய்ப்பே இல்லை, என்னைப் போல ஒரு convenient shortcut ஆகத்தான் பெண்ணெழுத்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார். அவர் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள்
- யதுகிரி அம்மாள், பாரதி நினைவுகள்
- அனுத்தமா, கேட்டவரம்
- கிருத்திகா, சத்தியமேவ
- ஹெப்சிபா ஜேசுதாசன், புத்தம்வீடு
- ஆர். சூடாமணி, பிஞ்சு முகம்
முழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், க.நா.சு. பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
- பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள்
- யதுகிரி அம்மாள், பாரதி நினைவுகள்
- அனுத்தமா, கேட்டவரம்