நினைவுகள் நெய்திடும் மௌனம் : சியாம்
June 01, 2025
ஆனந்தி நினைவுகளில் கூட நிச்சயமின்மையின் சாயல் படிந்தவளாகவே இருக்கிறாள். நினைவுகளில் ஆனந்தியும் பிறரும் மௌனம் பூணுகிறார்கள். அவர்கள் மௌனம் பூணும் இடங்களை ஆனந்தி மொழிபெயர்த்துவிட்டால் அவளது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா? நிச்சயமின்மையிலிருந்து மௌனமும், மௌனத்திலிருந்து நிச்சயமின்மையும் சதா பிறந்துகொண்டே இருக்கிறதா?