Reading view

மகிழ்ச்சி என்பது ஓர் ஏமாற்று வேலை : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

May 01, 2025 எனக்கு துயாரார்த்தமே நம்பகமான ஒன்றாகப் படுகிறது. மகிழ்ச்சி என்பது இந்த உலகுக்கும் நமக்கும் இடையே நடக்கிற,  உணர்ச்சிகள் சார்ந்த பரிவர்த்தைனைகளில் இருந்து  நாம் அடையும் இலாபம்.  அதிக விலை வைப்பதால் கிடைப்பதே இலாபம் என்பதால், அதனை எளிமையாக ஓர் வாழ்விற்கு நம்பகத்தன்மை அளிக்கும் உணர்வாக நான் துயரார்த்தத்தை பார்க்கிறேன்.  நாம் மகிழ்ச்சியை ஐயுறுவோம், ஆனால் துயரத்தை சிறுதும் கேள்வி கேட்க மாட்டோம்.  அது எப்போதும் நம்மிடம் இருந்து விலகாமல் இருக்கும் நண்பர்களைப் போல இருக்கிறது.  அதன் அணுக்கம் நமக்கு ஓர் ஆழ்பரிச்சயம்.
  •  

தேசியம் என்பது காலனியம் அரசியல்ரீதியாக உருவாக்கிய ஒரு பிரச்சனை : நிஷாந்த்

March 31, 2025 காலனிய எதிர்ப்பு சிந்தனையாளர்கள் காலனியம் உருவாக்கிய பொருளாதார அழிப்புகள், கலாச்சார அழிப்புகள், திணிப்புகளை பற்றிப் பேசும் அதே நேரம் அரசியல்ரீதியில் காலனியம் உருவாக்கிய பிரச்சனைகளை பேசவதில்லை. தேசியமும் அப்படி ஒரு பிரச்சனை. காலனிய அமைப்பு உருவாக்கிய அரசியல் கட்டமைப்புகளை நாம் கேள்விக்குட்படுத்தவில்லை என்ற விமர்சனத்தை மஹ்மூட் மம்தானி (Mahmood Mamdani) முன்வைப்பார். ஐரோப்பிய காலனியமானது தேசியம், சமூக ஒப்பந்தம், இனமய முதலாளிதத்துவம், அரச நிர்வாக அமைப்பு (போலிஸ், ராணுவம்), சட்ட அமைப்பு என்பவற்றை உலகிலிருக்கும் அனைத்து சமூங்களிலும் இயல்பாக்கம் செய்துள்ளது. இவற்றை எதிர்ப்பதற்கான வடிவங்களை காலனியம் உருவாக்கியளிக்கவில்லை; மாறாக, இவ்வடிவங்களை உருவாக்கியும் அவற்றை உலகளவில் சமூகங்களோடு நீக்கமற பிணைப்பதற்குமே வழிவகுத்ததாகக் கருதுகிறேன்.
  •